எரிபொருள் விலை மீண்டும் உயரும் சாத்தியம்
அடுத்த வருடம் முதல் VAT வரியை 15% இல் இருந்து 18% ஆக அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் உட்பட பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிக்குமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, எதிர்காலத்தில் மக்கள் வாழ முடியாது எனவும், அடுத்த வருடம் எரிபொருள் விலை 10% அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், டீசல் மற்றும் பெற்றோல் விலைகளுக்கும் VAT வரி விதிக்கப்பட்டால் டீசல் மற்றும் பெற்றோல் விலைகள் 420 ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)