ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல் : 4000 ஹெக்டேர் வனப்பகுதிய நாசம்!
ஸ்பெயினின் இந்த ஆண்டில் முதல் காட்டுத்தீ சம்பவம் பதிவாகியுள்ளது. இதனையடுது;து மக்கள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஸ்பெயினின் கிழக்கு காஸ்டெல்லோன் பகுதியில் 4000 ஹெக்டேர் காடுகள் காட்டுத்தீ காரணமாக அழிந்துள்ளன.
அத்துடன் 1700 கிராமவாசிகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தீயணைப்பு நடவடிக்கைகளில் 20 விமானங்கள், மற்றும் ஹெலிகாப்டர்கள், 500இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)