இலங்கையில் இளைஞனின் உயிரை பறித்த மதுபானம்

குருணாகல் – பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல், வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
இவர் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)