தீபாவளி வின்னர் யார் தெரியுமா? வசூலில் செம்ம மாஸ்….
கார்த்தி சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தாண்டு தீபாவளி வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது தீபாவளி தினமான நேற்று வசூலில் மரண மாஸ் காட்டியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. இவைகளில் ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இடையே தான் நேரடியாக போட்டி நிலவியது.
இந்த இரண்டு படங்களுமே 10ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முதல் மூன்று நாட்கள் நிலவரப்படி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தான் இந்தாண்டு தீபாவளி வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிகர்தண்டா முதல் பாகம் போலவே, தற்போது வெளியான டபுள் எக்ஸும் சினிமா ப்ளஸ் கேங்ஸ்டர் ஜானரை பின்னணியாக வைத்தே உருவாகியுள்ளது.
அதேநேரம் 1975ல் நடக்கும் பீரியட் ஜானர் படமாகவும் இது உருவாகியுள்ளது. பக்கா கமர்சியல் மாஸ் எலிமெண்ட்ஸுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். முக்கியமாக எஸ்ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளில் 2.5 கோடி மட்டுமே வசூலித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அடுத்த இரண்டு நாட்களில் மரண மாஸ் காட்டியுள்ளது. ஆரம்பம் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கூடியது. அதேநேரம், கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், 2வது நாளில் 4.86 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
இந்நிலையில், நேற்று தீபாவளி தினம் என்பதால் இந்தப் படத்துக்கு மேலும் நல்ல ரீச் கிடைத்துள்ளது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் 7.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கார்த்தியின் ஜப்பான் நேற்று 4 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்த நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், அதனை ஓவர்டேக் செய்துள்ளது. அதன்படி கார்த்தியின் ஜப்பான் முதல் மூன்று நாட்களில் 11 கோடி ரூபாய் வசூலிக்க, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 14.52 கோடி வசூலித்துள்ளது.