ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
செங்கம் ஒன்றியம் பக்கிரிபாளையம் ஊராட்சி காமாட்சி நகரில் ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் பக்கிரி பாளையம் ஊராட்சி காமாட்சி அம்மன் நகரில் புதியதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வராஹி சித்தர்.ஸ்ரீ ல ஸ்ரீ பஞ்சாட்சரம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் கோயிலின் மேல் உள்ள கலசத்திற்கு புனித நீரால் பூஜை செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த கும்பாபிஷேக
விழாவில் 1000கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)




