திருகோணமலையில் மிதமான நிலநடுக்கம் பதிவு!

திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் இன்று (12.11) ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை மொறவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)