பொழுதுபோக்கு

தலைவர் 171-இல் இவரும் நடிக்கிறாரா? மாஸ் தகவலா இருக்கே…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171வது படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தலைவர் 171வது படம் எல்சியூ இல்லை என்று லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாக கூறியிருந்தாலும், அந்த படத்திலும் மல்டி ஸ்டாரர்கள் நடிப்பது உறுதி என்றார்.

இந்நிலையில், ரஜினியுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும், கமல் தயாரிப்பில் நடிக்க அழைத்ததுமே உடனடியாக ஓகே சொல்லி விட்டு நடித்தார். அனைத்து பெரிய நடிகர்களையும் மதித்து நடக்கக் கூடிய நடிகராகவே சிவகார்த்திகேயன் உள்ளது அவரது சிறப்பான குணங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர். ராணுவ வீரர் ஒருவரின் கதையை மையமாக வைத்து அந்த படம் தயாராகி வருகிறது.

See also  சூர்யா - ஜோதிகாவின் மகள் செய்துள்ள சாதனை - குவியும் பாராட்டு

டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதுமே ரஜினிக்கு மகனாக சிவா தான் நடிக்கிறார் என வதந்திகள் பரவின.

ஆனால், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்திருந்தார். தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவி ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியை லோகேஷ் அணுகியதாகவும் அவர் மறுத்து விட்ட நிலையில், லாரன்ஸை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும், ரஜினிக்கு துணையாக பல மல்டி ஸ்டாரர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ள லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், தலைவர் 170 படம் ரிலீஸ் சமயத்தில் தான் தலைவர் 171 படத்தின் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

See also  அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content