உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாவிற்கு உடல்நிலைப் பாதிப்பு!
உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வாஸ்னியாக் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெக்சிகோவில் நடந்த உலக வர்த்தக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு இப்போது 73 வயதாகிறது. அவர் “வோஸ்” என்றும் அழைக்கப்படுகிறார். அவர் ஸ்டீவ் ஜாப்ஸுடன் இணைந்து 1976 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார்.
பின்னர் அவர்கள் முதல் ஆப்பிள் கணினியை உருவாக்கினர். அவர்கள் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மாற்றியுள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)