அமெரிக்காவில் பலியான இந்திய இளைஞர்! பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி!
அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயது இந்திய மாணவர் வருண் ராஜ் புச்சா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் படித்து வந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் வருண் படித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் திகதியன்று பொது உடற்பயிற்சி கூடத்தில் ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவரால் கத்தியால் தலையில் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வால்பரைசோ பல்கலைக்கழக அதிகாரிகள், “வருண் ராஜ் பூச்சாவின் மறைவை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.
எங்கள் வளாக சமூகம் அதன் சொந்த ஒன்றை இழந்துவிட்டது, இந்த அழிவுகரமான இழப்பை நாங்கள் வருணிக்கும்போது எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் வருணின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் செல்கின்றன” எனக் கூறியுள்ளார்.