இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் உடலுக்கு இறுதி அஞ்சலி
ஹமாஸின் பிடியின் பணயக் கைதியாக இருந்ததாகக் கூறப்படும் இலங்கையரான சுஜித் யத்வார பண்டாரவின் பூதவுடலுக்கு இஸ்ரேல் தூதரகத்தில் இன்று மத சடங்குகள் செய்யப்பட்டன.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர, ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.
அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
வென்னப்புவவை சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இஸ்ரேலில் தாதியாக பணியாற்றிய இலங்கைப் பணிப் பெண்ணான அனுலா ஜயத்திலக்க என்பவரும் ஹமாஸின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.