5 டன் மிளகாய் கொண்டு நிகும்பலா யாகம் நடைபெற்றது
காஞ்சிபுரம் அருகே பிள்ளையார்பாளையம் பகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயத்தில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் மிக விமர்சையாக யாகங்கள் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பங்குனி மாதம் அமாவாசை ஒட்டி இன்று இத்திரு கோவிலில் ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் உலக நன்மைக்காகவும் பொதுமக்கள் நலம் பெற வேண்டிய 5டன் மிளகாயை கொண்டு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இன்று மாலை தொடங்கிய இந்த யாகத்தில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் பாட யாகப் பொருள்கள் கொண்டு எறிவது மட்டுமல்லாமல் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 5 டன் மிளகாயை தீயில் இட்டு எரித்து சிறப்பு நிகும்பலா யாகம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மக்கள் யாகத்தில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபிருத்யங்கிரா சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.