இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டார!!! இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை
இஸ்ரேலில் உயிரிழந்த சுஜித் பண்டாரவிற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நட்டஈடுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவர் காணாமல் போயிருந்தார். இஸ்ரேலில் செவிலியராகப் பணிபுரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஹமாஸ் தீவிரவாதிகளின் பணயக்கைதியாக இருக்கலாம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த 31ம் திகதி தகவல் கிடைத்தது.
அதன் பின்னர், சுஜித் பண்டார மரணமடைந்ததை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தினார்.
வென்னப்புவ – கொலிஞ்சாடிய பிரதேசத்தில் வசித்து வந்த இவர், இறக்கும் போது 48 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.