கோப் குழு முன் முன்னிலையாகவுள்ள நிறுவனங்கள்!
எதிர்வரும் வாரத்தில், பல அரச நிறுவனங்களை பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் முன் அழைக்க தீர்மானித்துள்ளனர்.
அதன்படி, நாளை மறுதினம் (07.11) இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேபோல் வரும் புதன் கிழமை இலங்கை தர நிர்ணய நிறுவனம் கோப் குழு முன்னிலையிலும், சப்ரகமுவ பல்கலைக்கழகம் வியாழன் அன்றும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்க கணக்குகள் தொடர்பான குழுவும் அடுத்த வாரத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, கல்வி அமைச்சும் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களமும் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கக் கணக்குக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இம்மாதம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், எதிர்வரும் 10ஆம் திகதி, தனியார் சட்டமூலமான உள்ளூராட்சி நிறுவனங்கள் திருத்தச் சட்டமூலம் பரிசீலிக்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.