WhatsApp அறிமுகம் செய்யும் மற்றுமொரு புதிய வசதி
வாட்ஸ் அப் பீட்டா பதிப்பை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
தற்போது வரை பயனர்கள் வாட்ஸ் அப்பில் வரும் வீடியோக்களை அவர்களின் விருப்பம் போல பார்வேர்ட் மற்றும் ரீவைண்டு செய்து பார்க்க முடியாது. ஆனால் தற்போது கொடுத்துள்ள புதிய அப்டேட்டில், வீடியோக்களை பயனர்கள் அவர்களின் விருப்பம் போல பார்வேர்ட் அல்லது பேக்வேர்ட் செய்யும் பட்டனை சேர்த்துள்ளனர்.
இதற்கு முந்தைய அப்டேட்டில்தான் வாட்ஸ் அப் ஒரே மொபைல் எண்ணில் இரண்டு ப்ரொபைல்களை உருவாக்கும் அம்சத்தை சேர்த்தது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள வாட்ஸ் அப் பீட்டா 2.23.24.6 என்ற வெர்ஷனில் வீடியோவுக்கான புதிய அப்டேட் வந்துள்ளது. இந்த அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் மேலும் டெஸ்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும் என கூறப்படுகிறது.
இந்த புதிய அப்டேட்டில் வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி அதை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடியும். சொல்லப்போனால் இந்த அம்சம் யூட்யூபில் உள்ளது போலவே இருக்கிறது. இதனால் ஒரு பயனர் அவர் பெரும் அல்லது அனுப்பும் வீடியோக்களை எளிதாக பார்க்கலாம்.
இந்த அம்சம் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் சமீபத்திய வாட்ஸ் அப் பீட்டா அப்டேட்டை தரவிறக்கம் செய்யும் குறைந்த பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது இனிவரும் காலங்களில் மேலும் பலருக்கு படிப்படியாக வழங்கப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.