நேபாள பூகம்பத்தில் இலங்கையர்களுக்கு பாதிப்பா – தூதரகம் வெளியிட்ட தகவல்
நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள பூகம்பம் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என காத்மண்டுவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் பூகம்பம் மையம்கொண்டிருந்த பகுதியிலிருந்து வெகுதொலைவிலேயே வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் தற்போது சுமார் 100 இலங்கையர்கள் வசிக்கின்றனர் இவர்களில் 40 மாணவர்கள் பொக்காராவிலும் பத்துபேர் காத்மண்டுவிலும் வாழ்கின்றனர் என தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் காத்மண்டுவிலேயே வாழ்கின்றனர் என தெரிவித்துள்ளது.
வருடாந்தம் பெருமளவு இலங்கையர்கள் நேபாளத்திற்கு சுற்றுலா செல்வது வழமை இவர்கள் சில நாட்கள் லும்பினியில் தங்கியிருப்பார்கள் எனவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.