ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் ஒப்பீட்டளவில் குறைவான ஊதியம் பெறுகிறார்கள் என்று சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 87 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 37 சதவீதத்திற்கும் அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்வதை விரும்புவதாகவும் அவர்களின் சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கும் அலுவலகத்திற்கு வருபவர்களின் சம்பளத்திற்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டும் என்று பல நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
எவ்வாறாயினும், இவ்வாறு சம்பள இடைவெளியை உருவாக்குவது தொழில்சார்ந்தவர்களின் உரிமைகளை மீறுவதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆஸ்திரேலிய நிறுவனங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் தொலைதூர வேலைகளைக் குறைத்து, பணியாளர்களை முடிந்தவரை அலுவலகத்திற்கு அழைத்து வருவதாகக் கூறினர்.
அடுத்த 05 வருடங்களில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி பணியிடக் கொள்கைகளை உருவாக்குவதில் அவுஸ்திரேலிய நிறுவனங்கள் கவனம் செலுத்துவது விசேட அம்சமாகும்.