இலங்கை

அனுராதபுரத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் : இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

அனுராதபுரம்-கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப்பித்திக்கொள்ளாவ குறுலுகம கிராமத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தவரின் வீட்டுக்கு ஏழாம் தினமான நேற்றைய தினம் (28) வாகல்கட பிரதேசத்தில் இருந்து பௌத்தப்பிக்கு ஒருவர் குறித்த வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் விகாரையின் விகாராதிபதி மற்றும் கிராம மக்கள் சிலர் குறித்த பௌத்தப்பிக்குவின் வருகைக்கு எதிர்ப்பினை வெளியிட்டு பிரித் ஓதும் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடைத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றபோது பௌத்த பிக்குவை அனுப்பி வைக்க முற்பட்ட போது பொலிஸாரை தாக்கியத்துடன் கடமைக்கும் இடையூறு விளைவுத்துள்ளார்.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறுலுகம ரஜமஹா விகாரையின் விகாரதிபதியான (30வயது) ரஞ்சுனலாகே சுகதவன்ச ஹிமியை கைது செய்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிசார் உட்பட பௌத்த பிக்கு ஒருவரும் காயம் அடைந்த நிலையில் கெப்பித்திக்கொள்ளாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்