விண்வெளிக்குச் சென்ற சீனாவின் இளம் விண்வெளி வீரர்கள்
2030 ஆம் ஆண்டுக்கு முன்னர் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனாவின் முயற்சியின் விளைவாக இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இளைய குழுவினர் கிடைத்துள்ளனர்.
அதன்படி, வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தின் எல்லையில் அமைந்துள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஷென்சோ 17 விண்கலத்தில் அவர்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
லாங் மார்ச் 2-எஃப் என்ற ராக்கெட்டின் உதவியுடன் அவர்கள் விண்வெளிக்கு பயணமாகியுள்ளனர். இந்த விண்வெளி வீரர்கள் 38 வயதுடையவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)





