அமெரிக்காவில் 1 மில்லியன் மதிப்புள்ள டைனோசர் எலும்புகளை திருடி விற்ற நால்வர்
சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டைனோசர் எலும்புகள் உட்பட $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள “பழங்கால வளங்களை” வாங்கி மறுவிற்பனை செய்ததற்காக அமெரிக்காவில் நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் வின்ட் வேட் மற்றும் டோனா வேட் ஆகிய இருவர் உட்டாவில் வசித்து வந்தனர். இருவரும் முறையே 65 மற்றும் 67 வயதுடையவர்கள்.
மற்ற இருவர், ஸ்டீவன் வில்லிங், 67 மற்றும் ஜோர்டான் வில்லிங், 40, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஓரிகானை சேர்ந்தவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்ச் 2018 முதல் மார்ச் 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டாட்சிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர் எலும்புகளை வாங்கி, இடமாற்றம் செய்து, ஏற்றுமதி செய்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும், “அமெரிக்காவிற்குச் சொந்தமான திருடப்பட்ட சொத்தை அறிந்தே மறைத்து வைத்திருந்ததாகவும்” நான்கு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.