7 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்குள் விசா இல்லாமல் நுழைய அனுமதி
7 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பயணிகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
அதற்கமைய, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை தொடரும் முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வருகை தருவதாக தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையின் மூலம் அந்த ஏழு நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வர முடியும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இந்த நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் வீசாக்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கூறியுள்ளார்.