இலங்கை செய்தி

பல இந்து ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 21 இந்து ஆலயங்களில் திருடப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆலயங்களை உடைத்து பூசை மணிகளில் இருந்த தங்கப் பொருட்களையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை