Leo box office day 4: இண்டஸ்ட்ரி ஹிட்… 4 நாட்களில் லியோ வசூல் இவ்வளவா?
உலகம் முழுவதும் கடந்த அக்டோபர் 19ம் திகதி வெளியான லியோ திரைப்படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வசூல் தாறுமாறாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று மாலையே தயாரிப்பு நிறுவனம் இண்டஸ்ட்ரி ஹிட் என்றே அறிவித்த நிலையில், அதற்குள் அதிவேகமாக இண்டஸ்ட்ரி ஹிட்டே லியோ அடித்து விட்டதா? என விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான வாரிசு, பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்கள் 300 கோடி வசூலை தாண்டிய நிலையில், 4 நாட்களில் அந்த படங்களின் வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்து விட்டு அடுத்து ஜெயிலர் சாதனையை முறியடிக்க லியோ சென்று கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் 4வது நாளான ஞாயிற்றுக்கிழமை விஜய் நடித்த லியோ திரப்படம் இந்தியாவில் மட்டும் 179 கோடி வசூல் செய்து 200 கோடி வசூலை நோக்கி லியோ நகர்ந்து வருவதாக கூறுகின்றனர்.
3 நாட்களில் 305 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருந்த லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 4வது நாளில் அதிகபட்சமாக 90 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியுள்ளதாகவும் 390 முதல் 395 கோடி ரூபாய் வசூலை லியோ இதுவரை பெற்றிருப்பதால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதன் பின்னர் வசூல் கணக்கை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.