பிரஸ்ஸல்ஸ் தாக்குதலாளியின் புகலிட கோரிக்கையை நிராகரித்த ஐரோப்பிய நாடுகள்
பிரஸ்ஸல்ஸில் இந்த வாரம் இரண்டு ஸ்வீடன் கால்பந்து இரசிகர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி நான்கு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் பெற முயன்று தோல்வியடைந்த ஒருவர் என பெல்ஜிய அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
சந்தேகநபர் 45 வயதான துனிசிய நாட்டைச் சேர்ந்த அப்தெசலேம் லஸ்ஸூட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் இஸ்லாமிய அரசு குழுவின் பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடந்த திங்கட்கிழமை பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்தியவர் நான்கு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் கோரியிருந்தார்.
ஒவ்வொரு முறையும் அவர் பாதுகாப்பிற்கு தகுதி பெறாததால் நிராகரிக்கப்பட்டார்” என்று பெல்ஜிய குடிவரவு அமைச்சர் நிக்கோல் டி மூர் கூறியுள்ளார்.
(Visited 9 times, 1 visits today)