பேசல் விமான நிலையத்தில் குண்டு அச்சுறுத்தல்
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ள பேசல் முல்க்ஹவுஸ் சர்வதேச விமான நிலையத்தில் குண்டு தொடர்பாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
குண்டு அச்சுறுத்தல் காரணமாக விமான பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் நகர்த்தப்பட்டு இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விமான நிலையத்தின் பணிகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த குண்டு அச்சுறுத்தல் பொய்யானது என கண்டறியப்பட்டதன் பின்னர் விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு போலியாக குண்டு பீதியை ஏற்படுத்தியவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குண்டு அச்சுறுத்தல் தொடர்பிலான தகவல் கிடைக்கப்பெற்றதும் உடனடியாக விரைந்து செயல்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுங்கப் பிரிவினர், எல்லை பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரெஞ்சு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர் எனவும் பேசல் கான்டன் போலீசார் மற்றும் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி குண்டு குறித்து சோதனைகள் நடத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.