இலங்கைக்கு IMF இடம் இருந்து கிடைக்கவுள்ள பாரிய உதவி தொகை!
முதல் பரிசீலனையின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வுக்கு பின்னர் இது இடம்பெற்றுள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியின் பேரில், இலங்கைக்கு 254 மில்லியன் விசேட கொள்வனவு உரிமைகள், அதாவது சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் வசதியின் கீழ் இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதி உதவித் தொகை 660 மில்லியன் டொலர்களாகும்.
(Visited 7 times, 1 visits today)