காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் பணி ஆரம்பம்
காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இதனை முன்னெடுத்துள்ளது.
இந்தநிலையில், காஸா பகுதியில் மூன்று குடும்பங்கள் உட்பட 17 இலங்கையர்கள் வசித்து வருவதாக அந்த அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு குடும்பம் 23 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அவர்கள், பாதுகாப்பாக இருப்பதாக பென்னட் குரே அறிவித்துள்ளார்.
(Visited 5 times, 1 visits today)