சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் தற்காலிக இடங்களில் தங்கவைப்பு!
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் ஹல்துமுல்ல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பரிந்துரையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்தவில் வசிக்கும் 134 குடும்பங்களும், மஹகந்த பிரிவில் 23 குடும்பங்களும், மேல் மகல்தெனிய பிரதேசத்தில் 84 குடும்பங்களும், மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஊவா பரணகம உடுஹாவர பிரதேசத்தில் நேற்று பெய்த கடும் மழையின் பின்னர் அப்பகுதி வயல்களில் கும்புருவலி பனி போன்று வெண்குமிழ்கள் கொண்ட பொருளொன்றை காணக்கூடியதாக உள்ளது.
அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்திற்குப் பொறுப்பான வளிமண்டலவியல் நிபுணர் திரு.மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.