கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி மீண்டவர்கள், இதயம் தொடர்பான சிக்கல்களுக்கு ஆளாகும் ஆபத்து அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீண்டவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு அந்த ஆபத்து நேரும் சாத்தியம் 56 சதவீதம் அதிகம் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோன தொற்றிலிருந்து மீண்ட ஓராண்டுக்குப் பிறகு இதயச் செயலிழப்பு, பக்கவாதம், ரத்தக் கட்டி உருவாதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
குணமான நோயாளிகளில் அதிகமானவர்களிடம் களைப்பு, மூச்சிரைப்பு போன்ற தொற்றுக்குப் பிந்திய பிரச்சினைகள் ஓரளவு இருந்தன. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனா தொற்றுக்குப் பின் வழக்கத்துக்கு மாறான இதயத் துடிப்பு ஏற்பட்டது.
தடுப்பூசி போட்டு குணமடைந்தவர்களிடையே இதயப் பிரச்சினைகள் உருவாகும் சாத்தியம் 11 சதவீதமாக இருந்தது. நீண்ட கோவிட் நோயால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தென் கிழக்காசியாவில் நடத்தப்பட்ட முதலாவதும் ஆகப் பெரியதுமான ஆய்வு இதுவாகும்.