ரஷ்யாவிற்கு எதிராக செயற்பட்ட ஊடகவியலாளருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!
உக்ரைன் – ரஷ்ய போரை எதிர்த்து விமானத்தில் போராட்டம் நடத்திய ரஷ்ய தொலைக்காட்சி தொகுப்பாளர் விஷம் குடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பிரெஞ்சு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு தனது மகளுடன் ரஷ்யாவிலிருந்து பிரான்சுக்கு தப்பிச் சென்ற மெரினா ஓவ்சியனிகோவா, அவசர சேவைகளை அழைத்ததாகவும், தனது பாரிஸ் குடியிருப்பை விட்டு வெளியேறும்போது திடீரென நோய்வாய்ப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவம், என்று பிரெஞ்சு தலைநகரின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
45 வயதான அவர், தான் விஷம் குடித்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறினார். அவரது குடியிருப்பை போலீசார் ஆய்வு செய்து வருவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விளாடிமிர் புட்டினின் ஆட்சியை சவால் செய்த அல்லது விமர்சித்த பல முக்கிய பிரமுகர்கள் விஷம் குடித்ததாக சந்தேகிக்கப்பட்டு பின்னர் நுாய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.