சம்மாந்துறையில் காட்டுயானைகளினால் அல்லலுறும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு 08 இல் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ளதோடு இன்று அதிகாலை தனியான் யானை ஒன்றும் வந்து சென்றுள்ளது
சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள் நுழைந்த காட்டு யானை அப் பிரதேசத்தில் பயிர்களை சேதப்படுத்தியதோடு வீட்டின் சுவர்களும் உடைக்கப்பட்டு வீட்டில் உள் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்கு உட்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு
இவ்வாறு நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களை ஏற்படுத்துவதன் காரணமாக மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர்.
அதனால், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.