காசாவை முழுவதுமாக முடக்குமாறு உத்தரவிட்ட இஸ்ரேல் அரசாங்கம்
காசாவை முழுவதுமாக சூழ்ந்து முடக்க இஸ்ரேல் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மின்சாரம், உணவு, எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
காசா மீது முழுமையான தடை அமல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவா காலண்ட் தெரிவித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் காசா முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.
இஸ்ரேல் உள்ளேயும் காசா மேற்குக் கரையை சுற்றிலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையில் யுத்தம் நடக்கவில்லை என்றும் அங்கு பெரும்பகுதியை இஸ்ரேல் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு கூடுதலான உதவிகள் வழங்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து, ஜெட் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மெடிட்டேரியன் கடல்பகுதியை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளன.
(Visited 9 times, 1 visits today)