ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,000 ஐ நெருங்குகிறது
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்த ஆண்டின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானைத் தாக்கிய தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில்
பலி எண்ணிக்கை 3,000ஐ நெருங்குகிறது என தலிபான் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெராத் நகரின் பிராந்திய தலைநகரில், மக்கள் மேலும் புவி நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது பூங்காக்கள் மற்றும் தெருக்களில் உறங்கினர் என தெரிவிக்கப்படுகின்றது.
திங்களன்று கிராமப்புறங்களில் 5.9, 4.9 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அந்தப் பகுதியிலும் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை எங்களுக்கு உள்ளது” என்று தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.