ஹமாஸின் முன்னோடியில்லாத தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில் மத்திய கிழக்கை மாற்றும் – நெதன்யாகு!
காஸா பகுதியில் இருந்து ஹமாஸின் முன்னோடியில்லாத தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதில், மத்திய கிழக்கை மாற்றும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு எல்லை நகரங்களின் மேயர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், காஸா குடிமக்களை அனைத்து ஹமாஸ் தளங்களில் இருந்து வெளியேறுமாறும், அந்த தளம் விரைவில் இடிபாடுகளாக மாறும் என்றும் அவர் கூறினார்.
ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸின் தாக்குதல்களை பாராட்டியதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருப்பினும் போர் நடவடிக்கையில் எந்த பங்கையும் வகிக்க மாட்டோம் என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கிய கப்பல்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போர் பிரகடணம் செய்யப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துள்ள நிலையில், இஸ்ரேல் தரப்பில் இருந்து ஏறக்குறைய 700 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 03 இலட்சம் படையினரை களத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.