செய்தி தமிழ்நாடு

சிலிண்டர் விலை உயர்வு பெண்கள் ஒப்பாரி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு  சமையல் எரிவாயு சிலிண்டர்  விலை ரூ.50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு .1,103-ஆக உயா்த்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன.

அதேபோல, வணிக பயன்பாட்டு சிலிண்டரின்  விலை  350 ரூபாய் அதிகரிக்கப்பட்டு  2,119.50-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்து உயர்ந்து வரும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள்  நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை சார்பாக மலுமிச்சம்பட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஹாரூன் தலைமையில் நடைபெற்ற,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் , காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் பகவதி மற்றும் சந்திரமோகன் முகமது இஸ்மாயில், சுரேஷ்குமார், பாபு,

முகமது ஈஷா ஆகியோர் முன்னிலை வைத்தனர் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்  சமையல் எரிவாயுவை சுற்றி நின்று  தலை மற்றும் நெஞ்சில்  அடித்தபடி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் முழக்கங்களை எழுப்பினர்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி