வாழ்வியல்

வாழைப்பழத் தோலின் பலன்கள் – பல பிரச்சினைகளுக்கு தீர்வு

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும்.

சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலை தேயுங்கள்.

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால் அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.

சோரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி பேட் பேச்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழ தோலை தேயுங்கள் எரிச்சல் நின்று சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப்பழ தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின் வாழைப்பழ தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள் நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்து விடும்.

இரவு நீண்ட நேரம் படிப்பதாலும் வேலை செய்வதாலும் கண்களை சுற்றி கருவளையங்கள் தோன்றும். வாழைப்பழத் தோலை கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தின் மீது பூசிக்கொள்ளுங்கள் 20 நிமிடங்கள் அப்படியே ஊற விடுங்கள் குளிர்ந்த நீரில் கழுவுங்கள் வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள் கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும். மேலும் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுத்து வயது முதிர்வை கட்டுக்குள் வைக்கும்.

வாழைப்பழத் தோலில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின் ஏ யில் உள்ள கரோடினோய்ட் வைட்டமின் தொற்று உள்ள இடத்தை சரி செய்து பருக்களை குணப்படுத்தும். நன்றாக பழுத்த வாழைப்பழ தோலை நறுக்கி முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் மெதுவாக தேய்க்கவும். 10 நிமிடம் மசாஜ் செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்கு முன் அதை கழுவிவிடலாம். நீண்ட நேரத்தில் இருந்தால் நன்றாக வேலை செய்யும்.

 

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!