பிரான்ஸில் அபாயகரமான உடல் பருமன் பிரச்சினையால் சிக்கி தவிக்கும் மக்கள்
பிரான்ஸில் அபாயகரமான உடல் பருமன் பிரச்சினையால் மக்கள் சிக்கி தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இங்கு வாழும் மக்கள் தொகையில் 43.7% சதவீத மக்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையைவிட இருமடங்கு அதிகமான எடைய கொண்ட பருமன் உள்ளவர்களாக உள்ளனர்.
17% சதவீதமானவர்கள் நான்கு மடங்கு அதிகமான எடையை கொண்டுள்ளனர், சிறுவர்களில் 6 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களில் 20% சதவீதமானவர்கள் அதிக உடல் பருமன் உள்ளவர்களாக உள்ளனர் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருகிவரும் துரித உணவகங்கள் உடல் பயிற்சி இன்மை போன்ற பல காரணங்களினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(Visited 9 times, 1 visits today)