WC – 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்கியது. இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி ஆட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோவ் – மலான் களமிறங்கினர். பேர்ஸ்டோவ் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார்.
மறுமுனையில் ஆடிய மலான் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 24 பந்துகளில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஜோரூட் பொறுமையுடன் ஆடினார்.
அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோவ் 25 ரன்னிலும் ஹாரி புரூக் 25 ரன்னுலும் மொயின் அலி 11 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனையடுத்து ஜோ ரூட்டுடன் – பட்லர் ஜோடி சேர்ந்து சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் அடித்து அசத்தினார். பட்லர் 43 ரன்களில் இருந்த போது ஹென்றி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 77 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.