ரயில்கள் தாமதமாகலாம் : பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

மாளிகாவத்தை புகையிரத வீதியில் இருந்து புறப்படும் புகையிரதங்கள் சில தாமதங்களை எதிர்கொள்ளலாம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் ஊழியர்கள் தாக்குதல் சம்பவம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதால் குறித்த தாமதம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை ரயில்வே முற்றத்தில் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருக்கும், ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து, பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மாளிகாவத்தை ரயில் முற்றத்திற்குச் செல்ல மறுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் புகையிரத அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)