நுளம்புகளால் பரவும் நோய் : மலேரியா தடுப்பூசியை பரிந்துரைக்கும் உலக சுகாதார ஸ்தாபனம்!
சில நுளம்புகளால் பரவும் ஆபத்தான நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மலேரியா தடுப்பூசிகளை பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
நோய் அபாயத்தில் உள்ள குழந்தைகளுக்கு மலேரியாவைத் தடுக்க, R21/Matrix-M எனப்படும் இரண்டாவது தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்துள்ளது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட R21/Matrix-M, என்ற தடுப்பூசியானது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சில ஆப்பிரிக்க நாடுகளில் வெளியிடப்படும் என்றும் பிற நாடுகளில் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கிடைக்கும், எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)