ஆஸ்திரேலியாவில் அபாய பகுதிகள் அறிவிப்பு – இருப்பிடங்களை விட்டு வெளியேறும் மக்கள்
ஆஸ்திரேலியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் மொத்த தீ தடுப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னியில் நேற்று மதியம் 35.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இதன்படி, 1961 மற்றும் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி பதிவான அதிகபட்ச வெப்பநிலையான 33.1 செல்சியஸ் பதிவானது முறியடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, தெற்கு ஆஸ்திரேலியா, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் கடுமையான காற்று மற்றும் காட்டுத் தீ எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
அபாய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து காட்டுத்தீ தற்போது மிதமான அளவில் உள்ளது, மேலும் மக்கள் தீங்கு விளைவிக்கும் புகையிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.