மனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட பிரமாண்ட சாம்ராஜியம் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை : சிந்தியுங்கள்!
கனேடிய காட்டுத்தீ முதல் லிபியாவில் வெள்ளம் வரை கடந்த சில மாதங்களாக பேரழிவுகரமான வானிலை மாற்றங்கள் உலகளாவிய தலைப்புச் செய்திகளில் பிரதான இடத்தை பிடித்துள்ளன.
இன்னும் அதிகரித்து வரும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகள் காரணமாக கிரகம் வெப்பமடைவதால், காலநிலை மாற்றம் தீவிர வானிலை பேரழிவுகளுக்கு முதன்மை காரணியாக விளங்குகிறது.
“எந்தவொரு சூறாவளியும் 100% காலநிலை மாற்றத்தால் ஏற்படவில்லை, ஆனால் இது பல்வேறு வழிகளில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுகிறது, என ஆய்வாளர் ஒருவரும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023 கோடையில் கனேடிய கிழக்கிலிருந்து மேற்கு கடற்கரை வரை காட்டுத்தீ பரவியபோது, முந்தைய தாக்கங்களை விட இம்முறை பாரிய சேதத்தை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, UK-ஐ தளமாகக் கொண்ட World Weather Attribution (WWA) சேர்ந்த ஆய்வாளர்கள் காலநிலை மாற்றம் சராசரியை விட 20-50% அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.
அண்மைய காலங்களில் மிதமிஞ்சிய வெப்ப அலைகள் மனித இருப்புக்கு ஆபத்தாக அமைந்தன. அது மாத்திரம் அல்லாமல் தற்பொது வெளியாகி வரும் ஆய்வுகள் பெரும்பாலும், காலநிலை மாற்றத்தை முதன்மை படுத்தியே வெளியாகி வருகின்றன.
குறிப்பாக அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுதல் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. பனிப்பாறைகள் உருகுவதால் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதைவிட மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் புதிய வைரஸுகள் தோற்றம் பெறுவதுதான்.
உண்மையில் பனிப்பாறைகள் உருகுவதானது நூற்றாண்டு காலமாக உறைந்த நிலையில் தூங்கிக் கிடக்கும் எண்ணற்ற வைரஸுகள் புத்துயிர் பெற்று எழ இந்த காலநிலை மாற்றம் வழியமைத்துக்கொடுக்கிறது.
அவ்வாறு பரவும் புதிய வைரஸுகளானது, கொரோனாவினால் ஏற்பட்ட பேரழிவுகளை விட மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அண்மையில் வெளியாகிய ஆய்வு ஒன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். ஐரோப்பிய கண்டத்தில் புதிதாக ஒரு வைரஸ் தோற்றம் பெறும் என்றும், அந்த வைரஸால் ஏழு கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் கூறப்பட்டது.
ஆகவே எம்மைச்சுற்றியுள்ள அல்லது மனிதர்களால் கட்டியெழுப்பப்பட்ட இந்த பிரமாண்ட சாம்ராஜியம் நம் கண் முன்னே சரியும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை கண்கூடாக காணமுடியும்.