பொழுதுபோக்கு

கொதித்துப் போயிருந்த “லியோ” ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்க வருகின்றது “படாஸ்”

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அதிருப்தியில் இருக்கும் ரசிகர்களை திருப்திபடுத்துவதற்காக சூப்பர் அறிவிப்பு ஒன்றை ‘லியோ’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதாவது ‘லியோ’ படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘லியோ’ படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

படாஸ் என்ற இந்த பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இசை வெளியீட்டு விழா ரத்துக்கு பதிலாக அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் ஓரளவு அதிருப்தியை மறந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் இசையில் உருவான இந்த இரண்டாவது சிங்கிள் பாடலும் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://twitter.com/7screenstudio/status/1707013404928385164

(Visited 9 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்