அதிபர் சேவையில் 04 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை இணைத்துக்கொள்ள ஒப்புதல்!
அதிபர் சேவையில் மூன்றாம் தர பதவிகளுக்கான நியமனங்களை பங்குதாரர்கள் செய்துகொண்ட உடன்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு உயர் நீதிமன்றம் இன்று (27.09) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 4,718 தொடர்புடைய பணியிடங்களுக்கு நியமனம் செய்ய நீதிமன்றத்தில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நியமனங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.





