மின்சார கார் உற்பத்தியை துரித்தப்படுத்தும் நிசான் நிறுவனம்!
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், மின்சார கார் உற்பத்தியை துரிதப்படுத்த முடிவு செய்துள்ளது.
ஐரோப்பாவில் விற்கப்படும் அனைத்து நிசான் கார்களையும் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரத்தியேகமாக எலெக்ட்ரிக் கார்களாக மாற்ற நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இதேவேளை, 2030 ஆம் ஆண்டுக்கு பின்னர் டீசல் மற்றும் பெற்றோல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் பிரித்தானியாவின் தீர்மானம் 2035 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து முடிவை கருத்தில் கொள்ளாமல் நிசான் தனது முடிவை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையில், நிசான் தலைவர் தனது முடிவு சரியானது என்று கூறுகிறார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் கார்களின் விலை குறையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.