கோவையில் மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வரும் நிலையில், விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் கணிசமாக வடமாநிலத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த நாற்பது வருடமாக இந்த சங்கத்தின் சார்பாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,இந்த ஆண்டு மும்பையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் கோவை கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சுக்கரவார் பேட்டையில் துவங்கி காந்தி பார்க் வழியாக ஆர்.எஸ்.புரம் பகுதியை சுற்றி வந்தது.. மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கண்காட்சி போல, பெரும் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை வட மாநிலத்தவர் அனைவரும் பக்தியுடனும், உற்சாகத்து கலந்து கொண்டனர்.