ஐரோப்பா

தன் 33ஆவது வயதில் ஆக்ஸ்போர்டில் சேர்ந்த ஹாரிப்பாட்டர் புகழ் நடிகை!

ஹரிபார்ட்டர் புகழ் எம்மா வாட்சன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் படிப்பதற்காக சேர்ந்துள்ளார்.

2001ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக ஹாரிபாட்டர் படத்தில் அறிமுகமானவர் எம்மா வாட்சன்.அதன் பின்னர் ஹாரிபாட்டர் வரிசை படங்கள் மட்டுமன்றி பிற படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.

பிரான்சில் பிறந்த இவர் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர். கடந்த 2019ஆம் ஆண்டில் லிட்டில் வுமன் படத்தில் நடித்த எம்மா, அதன் பின்னர் 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் 33 வயதாகும் எம்மா வாட்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் Creative Writing படிப்பில் சேர்ந்துள்ளார்.

முதுநிலை படிப்புக்கு எம்மா தளத்தில் ஒரு சில விரிவுரைகளில் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், மீதமுள்ள வேலைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும்.இந்தப் படிப்பு வயதானவர்களுக்கானது மற்றும் பகுதிநேர அடிப்படையில் செய்யலாம், இது எம்மாவின் Schedule-க்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர் பிரபல நடிகை என்பதால், அவருக்கு வகுப்புகள் இருக்கும்போதெல்லாம் ஒரு பாதுகாப்புக் குழுவினர் உடன் இருப்பார்கள்.

(Visited 51 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!