ஆஸ்திரேலியாவில் கப்பலை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 80 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொக்கைன் கையிருப்பு கப்பலின் மேலோட்டத்தில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன்படி அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையினர் நீருக்கடியில் இயக்கக்கூடிய கருவியைப் பயன்படுத்தி மேற்கொண்ட விசாரணையின் போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் இருந்து நியூசிலாந்து வழியாக மெல்போர்ன் வந்தடைந்த கப்பல் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் பெர்த் நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டது.
சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பினால் இதனைச் செய்திருக்கலாம் எனவும் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர்.