ஜெர்மனியில் புதிய வீடுகள் அமைப்பதற்கான நிதி திட்டத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்கள்!
ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பாக வழங்கப்பட இருக்கும் நிதி திட்டத்துக்கு ஏற்ப சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பில் நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கான சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
ஜெர்மனியின் கட்டிட நிர்மாண துறை அமைச்சர் கையில் வைஸ் அவர்கள் ஏற்கனவே எரிபொருட்களை சேகரிக்கின்ற புதிய வீடுகளை கட்டுவதற்காக சில நிதி உதவி திட்டங்களை முன்வைத்து இருந்தார்.
அதாவது 350 பில்லியன் யுரோ பெறுமதியான இந்த நிதி உதவி திட்டத்தை அவர் முன் வைத்து இருந்துள்ளார்.
இந்நிலையில் தற்பொழுது இது வரை 8.6.மில்லியன் யுரோக்களை இவ்வாறான சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற வீடுகளை கட்டுவதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இவ்வாறான பணம் வழங்கப்பட்டதாகவும்,
பெருமளவு நிதியமானது பாயன்படுத்தாமலும், வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.