உக்ரைனுக்கு மேலும் உதவி செய்யும் அமெரிக்கா!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு மற்றொரு குறிப்பிடத்தக்க இராணுவ உதவிப் பொதியை நாளை (21.09) அறிவிப்பார் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொதியின் மதிப்பு உள்ளிட்ட எந்தவொரு விபரங்களும் வெளியாகவில்லை.
இந்த அறிவிப்பு வாஷிங்டன் DC க்கு Volodymyr Zelenskyy இன் வருகையுடன் ஒத்துப்போவதாக சர்வசேத ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து பல மேற்கத்தேய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.
இருப்பினும் உக்ரைனுக்கு உதவிகளை வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)