நிலநடுக்கம் உலுக்கிய மொரோக்கோவை நோக்கி படையெடுக்கும் சுற்றுப்பயணிகள்
மொரோக்கோவை வலுவான நிலநடுக்கம் உலுக்கி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிய நிலையில் சுற்றுலா பயணிகள் மீண்டும் அங்கு பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.
பண்டைய நகரான Marrakechக்கு சுற்றுப்பயணிகள் செல்லத் தொடங்கிவிட்டனர்.
நிலநடுக்கத்தால் மாரகேஷிலுள்ள சில வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடங்கள், UNESCO உலக மரபுடைமைத்தலம் ஆகியவை சேதமடைந்தன.
அவற்றுள் மதினா எனும் மிகப் பழைமையான நகரமும் சேதமடைந்தது. அதன் தொன்மையான சுவர்கள், குறுகலான பாதைகள், உலகப் புகழ்பெற்ற Jemaa el-Fnaa சதுக்கம், சந்தைப்பகுதி ஆகியவை நிலநடுக்கத்தில் சிதைந்தன.
குடியிருப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி சேதமடைந்த இடங்களைச் சுற்றித் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
பெரும்பாலும் செம்மண்ணால் கட்டப்பட்ட பழமையான கட்டடங்களைக் கொண்டிருப்பதால் அது ‘சிவப்பு நகரம்’ என்று அழைக்கப்படுகிறது.
மாரகேஷில் சுற்றுலா நடவடிக்கைகள் படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பி வருவதாக வழிகாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் emaa el-Fna சதுக்கத்தில் நின்றுபோன நடவடிக்கைகள் மீண்டும் உயிர்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.